Home /News /entertainment /

அஜித்துக்கு சமூக ஊடக கணக்கு எதுவும் இல்லை; இணையவும் விரும்பவில்லை - அதிகாரப்பூர்வ விளக்கம்

அஜித்துக்கு சமூக ஊடக கணக்கு எதுவும் இல்லை; இணையவும் விரும்பவில்லை - அதிகாரப்பூர்வ விளக்கம்

அஜித் குமார்

அஜித் குமார்

  • News18
  • Last Updated :
    நடிகர் அஜித்துக்கு சமூக ஊடக கணக்குள் எதுவும் இல்லை என்றும் அவர் எந்த சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை என்று அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
    அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

    அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் அஜித் குமாரின் கையொப்பமும் இடம்பெற்றிருந்தது.

    போலியான அறிக்கை


    இந்நிலையில் நடிகர் அஜத்திற்கு எந்த சமூக ஊடகத்திலும் கணக்கு இல்லை, அவர் எந்த சமூக ஊடங்களிலும் இணைய விரும்பவில்லை என்று அஜித் தரப்பிலிருந்து கடிததம் மூலமாக விளக்கமளிக்கப்பட்டுள்து.

    விளக்க அறிக்கை


    மேலும் அஜித் பெயர் மற்றும் கையெழுத்து தவறுதலாக பயன்படுத்திய நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி