• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ajith Actor : அஜித்தின் புதிய படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Ajith Actor : அஜித்தின் புதிய படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அஜித்

அஜித்

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.

  • Share this:
    அஜித் தற்போது தனது 61 வது படமான வலிமையில் நடித்து வருகிறார். போனி கபூர் இயக்கத்தில் ஹெச் வினோத் படத்தை இயக்கி வருகிறார். ஐந்து நாள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அது முடிந்தால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும்.

    வலிமையை அடுத்து மீண்டும் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூரே இந்த புதிய படத்தையும் தயாரிப்பார் எனவும் சொல்லப்பட்டது. அதாவது இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மூன்றாவது முறையாக அஜித் படத்தில் இணைகிறார்கள். ஆனால், அஜித்தின் புதிய படத்தை போனி கபூர் தயாரிக்க வாய்ப்பில்லை என்கின்றன சமீபத்திய செய்திகள்.

     



    Photos : இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்..

    அஜித்தை வைத்து விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு அஜித் அடுத்து கால்ஷீட் தர உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. விவேகம் படம் சத்யஜோதிக்கு நஷ்டத்தை தந்ததால், உடனடியாக விஸ்வாசம் படத்தை அவர்களுக்கு நடித்துத் தந்தார் அஜித். விஸ்வாசம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், மீண்டும் சத்யஜோதிக்கு கால்ஷீட் தர அஜித் முன்வந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



    சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தையும், ஹிப் ஹாப் தமிழா இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தையும் தயாரித்து வருகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: