வலிமை படத்தின் புது அப்டேட் ! இணையத்தில் வைரலாகும் குத்துப் பாடல் படப்பிடிப்பு புகைப்படங்கள்..!

அஜித்

வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் ஒன்றை ட்ரம்ஸ் கலைஞர்களுடன் இணைந்து யுவன் உருவாக்கி கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  நடிகர் அஜித் ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் தனது ரசிகர்களுக்காக மாஸ் படத்தை கொடுத்து வருகிறார். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில்,போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்திட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.

  வலிமை படத்தை பற்றிய அப்டேட்களை தல ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாக கேட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து சமீபத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 15 ஆம் தேதி நிறைவடைகிறது எனவும், ஓரிரு காட்சிகள் மட்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போனி கபூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.ஆனால் படம் ரிலீஸ் பற்றி படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

  மேலும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.சமீபத்தில் யுவன் வலிமை படத்தில் ஓப்பனிங் பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் எனக் கூறியிருந்தார்.இந்நிலையில் வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் பாடல் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.இந்த புகைப்படத்தில் இசையமைப்பாளர் யுவனோடு, விக்னேஷ் சிவனும் இருக்கிறார்.தற்போது இந்த புகைப்படங்கள் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

   

     மேலும் இது ஒரு குத்து பாடலாக அமையவுள்ளது.இந்த பாடலிற்காக ஒரிசாவிலிருந்து பாரம்பரியமிக்க ட்ரம்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இந்தப் பாடலில் பணிபுரிந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: