ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சண்டைக் காட்சியின் போது கை, கால்களில் காயம்... வலிமை ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்ற அஜித்...!

சண்டைக் காட்சியின் போது கை, கால்களில் காயம்... வலிமை ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்ற அஜித்...!

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வலிமை படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அஜித் குமாருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து ஷுட்டிங் நடைபெறுகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை படம் வேகமாக தயாராகிவருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமாருக்கு சண்டை காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவ முதலுதவி மட்டும் செய்து கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருகிறார் அஜித்.

அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ள செய்தி அவரின் ரசிகர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், #GetWellSoonThala என்று அவர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதேபோன்று நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு அந்த பகுதியில் தான் காயம் ஏற்பட்டது. குறிப்பிடத்தக்கது.  இந்த காயத்திற்கு உரிய சிகிச்சையை வலிமை திரைப்பட படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகு தான் செய்துகொள்வார் என்று அஜித்தின் நம்பத்தக்க வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

Published by:Sankar
First published:

Tags: Actor Ajith, Valimai