மாணவர்களுடன் ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கும் அஜித்: வைரலாகும் வீடியோ!

news18
Updated: October 12, 2018, 9:57 PM IST
மாணவர்களுடன் ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கும் அஜித்: வைரலாகும் வீடியோ!
தக்‌ஷா குழுவினருடன் நடிகர் அஜித்.
news18
Updated: October 12, 2018, 9:57 PM IST
நடிகர் அஜித் ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித், சினிமாவுக்குப் பிறகு புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கழைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.

தக்‌ஷா குழுவினருடன் நடிகர் அஜித்.


ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் நடிகர் அஜித்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. மேலும் இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியதாக தகவல் வெளியானது.

இந்த சாதனையைத் தொடர்ந்து தக்‌ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருந்து வழங்கி கவுரவம் செய்தது. இந்நிலையில் தக்‌ஷா குழுவோடு அஜித் ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தக்‌ஷா குழுவினருடன் ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் நடிகர் அஜித்.


முன்னதாக, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் உள்ள டால்பியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் நடிகர் அஜித்.


இதில் அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு இரண்டாவதாக இடம்பிடித்தது. இதில் போட்டி என்னவென்றால் ரத்தமாதிரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும். இந்தப் போட்டியில் தக்‌ஷா குழு வடிவமைத்திருந்த விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஹ் யூஏஎஸ் என்ற ஆளில்லா விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது குறிப்பித்தக்கது.

தற்போது நடிகர் அஜித் தக்‌ஷா குழுவுடன் சேர்ந்து ஆளில்லா ஹெலிகாப்டர்-ஐ பறக்கவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.


First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...