• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ajith | வழிமாறிய நடிகர் அஜித்.. வழிகாட்டிய போலீஸ்! (வீடியோ)

Ajith | வழிமாறிய நடிகர் அஜித்.. வழிகாட்டிய போலீஸ்! (வீடியோ)

Youtube Video

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர் வழிமாறி சென்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் தொடங்க உள்ளது. கொரோனா சூழலால் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கும் நிலையில், அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொந்தரவு செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், மொயின் அலி ஆகியோரையும் விட்டு வைக்காமல் அப்டேட் கேட்டதோடு, கேட்கும் தகவல்களை எல்லாம் கொடுக்கும் கூகுளிடமும் வலிமை அப்டேட் கேட்டு வம்பிழுக்கின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித், வலிமை படம் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். அப்போதும் அடங்காத சிலர், அப்டேட் கேட்டு அட்டகாசம் செய்து வரும் நிலையில், திடீரென நேற்று காலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்தார். அப்போது அங்கிருந்த காவலர்கள், பணியாளர்கள் உள்பட பலரும் அஜித் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து அஜித் சென்றுவிட்ட நிலையில், அவர் எதற்காக வந்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் அஜித் வந்த வாடகை கார் தவறுதலாக சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

    துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் விருப்பம் கொண்ட அஜித், எழும்பூரில் உள்ள ரைபில் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். அங்குதான் சென்னை காவல் ஆணையரின் பழைய அலுவலகமும் இயங்கி வருகிறது.

    ரைபிள் கிளப் செல்வதற்காக கூகுள் மேப்பில் பதிவிட்டு வாடகை காரில் வந்துள்ளார். ஆனால் கூகுள் மேப் தவறுதலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் புதிய அலுவலகத்திற்கு வழிகாட்டியதால், அங்கு வந்துள்ளார். அப்போது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் 3வது நுழைவாயில் மூடப்பட்டு இருப்பதால், அவ்வழியாக செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.

    மேலும் படிக்க... Ajith: 3-வது முறையாக இணைகிறதா வலிமை கூட்டணி?

    இதையடுத்து, கீழே இறங்கிவந்த அஜித், பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் வழி தவறி வந்த தகவலை தெரிவித்துள்ளார். அப்போது அஜித்தை பார்த்து உற்சாகம் அடைந்த போலீசாரும், பணியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துள்ளனர்.

    வீடியோ



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: