பாதுகாவலர்களை நெகிழச் செய்த அஜித் - கவனம் பெறும் வீடியோ

பாதுகாவலர்களை நெகிழச் செய்த அஜித் - கவனம் பெறும் வீடியோ

அஜித் குமார்

பாதுகாவலர்களை அஜித் நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

  • Share this:
திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். அவர் தொடர்பான எந்த ஒரு தகவல் கிடைத்தாலும் அதை அவரது ரசிகர்கள் கொண்டாடித்தீர்ப்பார்கள். சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும் அஜித்துக்கு அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் சல்யூட் அடித்து வரவேற்க, அவர்களிடம் கை குலுக்கி நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து விடை பெற்றுள்ளார் அஜித்.

இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்த அஜித் ரசிகர்கள், அஜித்தின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.சமீபத்தில் யுவன்சங்கர்ராஜா ‘வலிமை’ படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: