• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் - வைரலாகும் ஆரி - ஐஸ்வர்யா வீடியோ

வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் - வைரலாகும் ஆரி - ஐஸ்வர்யா வீடியோ

நடிகர் ஆரி - ஐஸ்வர்யா தத்தா

நடிகர் ஆரி - ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா நடிக்கும் அடுத்த படத்துக்கான புரமோஷன் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா நடிக்கும் அடுத்த படத்துக்கான புரமோஷன் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை படத்தில் ஹீரோவாக நடித்த ஆரியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமித்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி,மகேஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் புரமோஷன் வீடியோவை வித்தியாசமான முறையிலும், மிக எளிமையாகவும் ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வீடியோ குறித்து நடிகர் ஆரி கூறுகையில், “இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வீடியோ டிக் டாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் தங்களோட வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை கடந்தே வந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய காதலை முதலில் கடக்கும் பருவம் இளமைப் பருவம் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக உணர்வார்கள். அப்படிப்பட்ட காதலை மையமாக வைத்து சுழலும் படம்தான் இது. ஆகவே, இப்படத்தினை எங்கள் காதல் கதை என்று சொல்லாமல் உங்கள் காதல் கதை என்று சொல்வதிலேயே படக்குழுவினராக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.



காதலிக்கும் நாம் கால ஓட்டத்தால் மாறுவோம். ஆனால் காதல் எப்போதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவருக்குக்குள்ளும் உலாவும் காதலை பெரிய அளவில் கொண்டாடுகிற இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சமூக வலைதளமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தங்களது காதல் விஷயத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ தளத்திலேயே படத்தின் ப்ரொமோஷன் வீடியோவை வெளியிட்டோம். அடுத்து விரைவில் படத்தின் தலைப்பும் அறிவிக்க உள்ளோம். அதையும் இதே போல டிக் டாக் தளத்திலேயே வெளியிட உள்ளோம். இனிமேல் இந்தமாதிரி படத்தின் பர்ஸ்ட் லுக், இசை, பாடல்கள் எல்லாம் இந்த தளத்தில் வெளியாவது அதிகரிக்கும்.” என்றார்.

அரசு விழாவில் அதிமுகவினரிடையே மோதல் - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: