• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் ஆமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்..

நடிகர் ஆமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்..

நடிகர் ஆமீர் கானுக்கு கொரோனா

நடிகர் ஆமீர் கானுக்கு கொரோனா

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடிகர் ஆமீர் கானின் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிந்தது.

  • Share this:
இந்தி நடிகர் ஆமீர் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னை சுயதனிமை படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகம் எடுத்துவரும் கொரோனா தொற்றின் மையமாக மீண்டும் ஒரு முறை மகாராஷ்டிரா மாறியிருக்கிறது. அங்கு தினந்தோறும் வைரஸ் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28,600 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல முதல்வரின் மனைவியும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நட்சத்திர ஆமீர் கானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 56 வயதாகும் ஆமீர் கான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய வீட்டிலேயே சுயதனிமையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் புகைப்படக் கலைஞர் வைரல் பயானி இத்தகவலை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது. இறுதியாக கொரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பவர் ஆமீர் கான். சமீபத்தில் படம் திரையிடல் நிகழ்ச்சி ஒன்றில் அவரை பார்க்க முடிந்தது.

ஆமீர் கானின் செய்தித்தொடர்பாளர் அறிவிப்பின்படி, “ஆமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அவர் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாகவே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அனைவரும் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடிகர் ஆமீர் கானின் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: