• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கஜா புயல் நிவாரணத்துக்கு உதவுங்கள்: அமீர் கான் உருக்கமான வேண்டுகோள்

கஜா புயல் நிவாரணத்துக்கு உதவுங்கள்: அமீர் கான் உருக்கமான வேண்டுகோள்

அமீர்கான் - நடிகர்

அமீர்கான் - நடிகர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் அனைவரும் உதவ வேண்டும் என்று பிரபல நடிகர் அமீர் காண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் அனைவரும் உதவ வேண்டும் என்று பிரபல நடிகர் அமீர் காண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. புயல் பாதிப்பிலிருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு வர தன்னார்வலர்கள் தொடங்கி பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வலியுறுத்தி பாலிவுட் நடிகர் அமீர்கான் ட்வீட் செய்துள்ளார்.



    அதில், “கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து மிகவும் கவலையடைந்தேன். அங்கு கஷ்டப்படும் நம்முடைய சகோதரர், சகோதரிகளுக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவுவோம். எந்தவிதத்திலாவது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். அமீர் கானின் இந்தக் கோரிக்கைக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

    பெற்ற குழந்தையை தாயே கொன்ற கொடூரம் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: