Arjun Sarja: அட்வென்ச்சர் ரியாலிட்டி ஷோவுக்கு ஆக்ஷன் கிங் தொகுப்பாளராகிறாரா?

நடிகர் அர்ஜுன்

நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் ஆக்சன் கிங் அர்ஜுனை ஹோஸ்டாக நடிக்க அணுகியதாக நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்கள் தற்போது வெளி?

  • Share this:
சர்வைவர் என்ற ஒரு பிரபலமான ஸ்வீடிஷ் ரியாலிட்டி ஷோ, இங்குள்ள பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், இந்த நிகழ்ச்சி விரைவில் ஒரு தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் என்றும் ஏற்கனவே சில தகவல்கள் வெளிவந்தன. மேலும் இந்த சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிலம்பரசன் டி.ஆர் (STR), தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் குழு பரிசீலித்து வந்ததாக செய்திகளும் கசிந்தன.

இருப்பினும், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் ஆக்சன் கிங் அர்ஜுனை ஹோஸ்டாக நடிக்க அணுகியதாக நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்கள் தற்போது வெளியாக உள்ளன. இது நிகழ்ச்சி தொடர்பாக கசிந்த தகவல் என்னவென்றால், “பெயர் குறிப்பிடுவது போல, இந்த நிகழ்ச்சி உயிர்வாழும் உள்ளுணர்வைப் பற்றியது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் திரையுலக பிரபலங்களாக இருப்பர். அவர்கள் அனைவரும் தொலைதூரத் தீவில் தங்கியிருப்பார்கள். அங்கு அவர்கள் வாழ குறைந்தபட்ச ஆதாரங்கள் மட்டுமே வழங்கப்படும். மேலும் அவர்கள் நிகழ்ச்சியில் தொடந்து இருப்பதற்கு வெவ்வேறு டாஸ்குகளை செய்ய வேண்டியிருக்கும். மேலும் அதற்கான கூடுதல் ஆதாரங்களையும் பெறுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் சாகச பயணங்கள் அதிகமாக இருப்பதால், அதிரடி படத்திற்காகவே அறியப்பட்ட அர்ஜுன் ஒரு சிறந்த தொகுப்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் உணர்ந்தனர். நடிகரும் கூட இந்த கருத்தைப் பற்றி அறிந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோவுடன் தொலைக்காட்சி இடத்தை ஆராய ஆர்வமாக உள்ளார். இருப்பினும், அவர் இன்னும் ஒப்பந்த வரிசையில் கையெழுத்திடவில்லை. அவர் தென் திரைபட துறையில் ஒரு சில படங்களின் படப்பிடிப்பை நடத்துவதால் அவர் இதற்கான கால்ஷீட் ஒதுக்குவது குறித்து விவாதித்து வருவதாக கூறப்படுகிறது"

ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் மற்றும் முதல்வன் படங்கள் இன்னும் கூட ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காமல் இடம் பிடித்துள்ளது. மேலும் சமீப காலமாக அவர் வித்தியாமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். மங்காத்தா மற்றும் இரும்புத்திரை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் அர்ஜுனின் நடிப்பு அமோக வரவேற்பை பெற்றது. அந்த வகையில் அவர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க போகிறார் என்று பேசப்படும் செய்தி ரசிகர்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also read... Cold Case: கோல்ட் கேஸ் - விறுவிறுப்பான ஹாரர் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்...!

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் மிக பிரம்மண்டமான அனுமன் சிலையை கட்டி முடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஹனுமானுக்கு பிரம்மாண்ட கோயில் ஒன்றை சென்னை விமான நிலையம் அருகே நிலம் வாங்கி கட்டி வந்தார். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் ஜுலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடத்தப்பட உள்ளது. இந்த விழா இரண்டு நாட்களும் அர்ஜுன் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கோயில் கொரோனாவால் தாமதமானது. இது பற்றி அர்ஜுன் கூறுகையில், கோயில் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவே திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காலம் என்பதால் மிக குறைந்த நபர்களைக் கொண்டு, எளிமையாக நடத்தப்பட உள்ளது. இதனை காண விரும்புபவர்களுக்காக நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: