Abi Navya and Deepak Kumar : அன்பு மழையில் அபி நவ்யா - தீபக்குமார் ஜோடி - இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கியூட் போட்டோஸ்!

அபி நவ்யா - தீபக்குமார் ஜோடி

சீரியலில் பலரும் அறியும் முகமாக இருக்கும் தீபக்குமார் மற்றும் அபி நவ்யா ஜோடி, தங்களின் முதல் வருட டேட்டிங்கையொட்டி, புகைப்படங்களாக பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர்.

  • Share this:
செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தார்.

இரு கதாப்பாத்திரங்களிலும் தனது நடிப்பு திறமையாக பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் அபி நவ்யா, தன்னுடைய காதல் குறித்து புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகரான தீபக்குமாரை கடந்த ஒருவருடமாக காதலித்து வருகிறார். தங்களின் காதல் ஒருவருடத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டில் கிடைத்த அன்பையும், பாசத்தையும் நினைவு கூர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டாக பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அபி நவ்யா, கடந்த ஓராண்டாக தன்னுடைய பெஸ்டாக இருந்ததற்கு நன்றி எனக் கூறியுள்ளார். "உன்னை எப்போது காதலித்து கொண்டே இருக்க வேண்டும், உன்னுடனேயே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  மார்பிங் வீடியோவால் உடைந்துப் போன நடிகை - சைபர் கிரைமில் புகார்

உன்னை நன்றாக பார்த்துக்கொள், எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இரு, இன்றைய நாளில் கடந்த ஓராண்டாக நான் இணைந்து பயணிக்க தொடங்கிய நாளை எட்டியுள்ளோம். மகிழ்ச்சியாக உள்ளது. உன்னை காதலிக்கப் பெற்றது என்னுடைய வரம், இதேபோல் என்றென்றும் இருக்க வேண்டும்" என தன்னுடைய காதலையும், அன்பையும், இதயப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.

 



 




View this post on Instagram





 

A post shared by abi navya (@abinavya)






இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்துக்கு கீழே இருக்கும் இந்த வரிகள் அவர்களின் காதலின் புரிதலையும், அன்பையும் பறைசாற்றுவதாக இருக்கிறது. கியூட் புகைப்படங்களுடன் கூட அன்பு வார்த்தைகளுக்கும் சேர்த்து, காதலர்களுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். காதலி அன்பை பரிமாறிவிட்டதால், காதலர் தீபக்குமார் சும்மா விடுவாரா என்ன? அவரும் தன் பங்குக்கு காதலியை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் காதலை வார்த்தைகளால் விவரித்துள்ளார்.

ALSO READ |  "செம க்யூட்" மகளின் குழந்தை புகைப்படத்தை பதிவிட்ட அர்ச்சனா!

தன்னுடைய பதிவில் "இந்த ஓராண்டு பயணம்போல் இன்னும் பல ஆண்டுகள் வர இருக்கிறது, என்றென்றும் உன்னை காதலிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார். சிம்பிளாக சொல்லியிருந்தாலும், காதலின் ஆழத்தை வார்த்தைகளே உணர்த்தி விடுகின்றன. இருவரையும் ஒருசேர இப்போது ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

 



 




View this post on Instagram





 

A post shared by abi navya (@abinavya)






 

இன்று இருப்பதுபோல் என்றென்றும் மகிழ்ச்சியாகவும், மண வாழ்க்கையில் விரைவில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளனர். தீபக்குமார் தற்போது என்றென்றும் புன்னகை சீரியலில் சித்தார்த் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் சீரியலில் நவீனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றிருந்த தீபக்குமார் சின்னத் திரையில் அனைவராலும் கவனிக்கபடக்கூடியவராகவும் வளர்ந்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: