'கண்மணி அன்போடு' கமல் பாடலை பாடிய ராஜ்கமல் - திட்டாதீங்க ப்ளீஸ் என வேண்டுகோள்!

கமலுடன் ராஜ்கமல் மற்றும் அவரின் மனைவி லதாராவ்

நாடகங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், தன் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவதை ராஜ்கமல் ஒருபோதும் தவறியதில்லை.

  • Share this:
சின்னத்திரை நடிகரான ராஜ்கமல், என்றென்றும் நட்சத்திர பாடல்கள் வரிசையில் இருக்கும் ’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலை பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அபியும் நானும் என்ற சின்னத்திரை தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர் ராஜ்கமல். சமூகவலைதளத்தில் படு சுறுசுறுப்பாக வீடியோக்களை பதிவேற்றி வரும் அவர், அவ்வப்போது குழந்தைகளுடன் நடனமாடும் வீடியோவையும் பதிவேற்றுவார். தற்போது பகீரத முயற்சி ஒன்றை எடுத்திருப்பதுடன், ரசிகர்களிடமும் தயவு செய்து திட்டிவிடாதீர்கள் என்று செல்லமாக வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

 



 




View this post on Instagram





 

A post shared by rajkamal (@rajkamal.actor)






அதாவது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் திரையுலகில் என்றென்றும் ஹிட் பாடல்கள் வரிசையில் இருக்கும் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலை முயற்சி செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பாடல் 1991 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ’குணா’ திரைப்படத்தில் இடம்பெற்றது. இசைஞானி இளையராஜாவின் இசையில் கமல்ஹாசன் மற்றும் ஜானகி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

Also Read:  கொரோனா பயங்கரம்: நோய்த்தொற்று அச்சத்தால் 5 வயது மகளை குத்திக் கொலை செய்த தாய்!

அந்தப் பாடலை ராஜ்கமல் தன்னுடைய குரலில் பாடியுள்ளார். மேலும், அந்த வீடியோவுக்கு மேல், “ஒரு trial.. ha ha ha.. pls use earphones for ur EARS SAFETY, me or Instagram not responsible for ur EARS DAMAGE (sic)” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய பாடும் திறமையை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சூப்பராக பாடியிருப்பதாக லவ் குறிகள் மூலம் தெரிவித்துள்ளனர். நாடகங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், தன் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவதை ராஜ்கமல் ஒருபோதும் தவறியதில்லை.



 




View this post on Instagram





 

A post shared by rajkamal (@rajkamal.actor)






ஜூன் 20 ஆம் தேதி ராஜ்கமல் தாய், தந்தையரின் திருமணநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்த ஆண்டு தந்தையர் தினமாகவும் இருந்ததால், மனைவியும் நடிகையுமான லதா ராவ், குழந்தைகளுடன் பெற்றோரை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தாய், தந்தையரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள், உங்களுக்கு மகிழ்ச்சி தேடி வரும் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அபியும் நானும் தொடர் மட்டுமல்லாமல் அஞ்சரைப் பெட்டி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், கல்யாணம், வசந்தம், செல்வி, ஆனந்தம் மற்றும் சகானா உள்ளிட்ட தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடைய மனைவி நடிகை லதா ராவும் தமிழ் சின்னத்திரையில் பல வெற்றித் தொடர்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார். மேலும், ராஜ்கமல் மற்றும் அவர் மனைவி லதாவும் இணைந்து ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.
Published by:Arun
First published: