சினி ஃபீல்டை விட்டே போய் விடுகிறேன் - வருந்திய மகனுக்கு அமிதாப்பச்சன் சொன்ன அட்வைஸ்!

சினி ஃபீல்டை விட்டே போய் விடுகிறேன் - வருந்திய மகனுக்கு அமிதாப்பச்சன் சொன்ன அட்வைஸ்!

அமிதாப்பச்சன் மற்றும் அபிசேக் பச்சன்

குரு போன்ற திரைப்படங்களில் சில மறக்கமுடியாத மற்றும் சக்தி நிறைந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தாலும், அமிதாப்பின் மகன் என்பதற்காக மட்டுமே யாரும் ஏற்று கொள்ளவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் அமிதாப் பச்சன். இவரது மகன் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன். சமீபத்தில் இவர் நடித்து OTT-யில் வெளிவந்த The Big Bull திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிபட வரிசையில் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த அனைவருமே அபிஷேக் பச்சனின் நடிப்பை பாராட்டாமல் இல்லை. அவரை பாராட்டி சமூகவலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் உலா வருகின்றன. குரு போன்ற திரைப்படங்களில் சில மறக்கமுடியாத மற்றும் சக்தி நிறைந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தாலும், அமிதாப்பின் மகன் என்பதற்காக மட்டுமே யாரும் ஏற்று கொள்ளவில்லை.

இந்திய திரையுலகில் அபிஷேக் பச்சன் தனக்கென ஒரு இடத்தை செதுக்கி கொண்டது அவ்வளவு எளிதானது இல்லை. பாலிவுட் வாழ்க்கையில் நிறைய சவால்களை அபிஷேக் பச்சன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரைப்படத்துறைக்கு வந்த பின் எதிர்கொண்ட சவால்கள் காரணமாக நடிப்பு வாழ்க்கைக்கு என்று தாம் உருவாக்கப்படவில்லை, எனவே நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட்டை விட்டு வெளியேறி விடலாம் என்ற நிலை தனக்கு ஏற்பட்டதாக அபிஷேக் வெளிப்படையாக கூறி உள்ளார்.

Also read... Dhanush: மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

தான் சினிமாவிற்கு சரிபடமாட்டேன் என்று எண்ணி சோர்ந்திருந்த நிலையில் தந்தை அமிதாப்பின் அறிவுரை, மனதை மாற்றி புதிய காணோட்டத்தை அளித்தது என்று கூறி உள்ளார் அபிஷேக். சமீபத்தில் அளித்த பேட்டியில், தொடர்ச்சியான தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தபோது ஏற்பட்டிருந்த தனது மனநிலையை பற்றி அபிஷேக் பச்சன் பேசினார். "ஒரு கட்டத்தில் நான் நடிப்பு துறையில் என்ன முயற்சித்தாலும் அது எனக்கு பலன் தரவில்லை. பலரும் என் காதுப்படவே நடிக்க தெரியவில்லை என்று பேசினர். இதனால் மனவருத்தம் ஏற்பட்டு சினிமா துறைக்கு நான் வந்ததே தவறு என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

தொடர்ந்து என் தனத்தை அமிதாப்பிடம் சென்று நான் சினிமா துறைக்காக பிறக்கவில்லை போல. எனக்கு இந்த தொழில் வேண்டாம் , இந்த துறையை விட்டு விலகி விடுகிறேன் என மனம் நொந்து பேசினேன்"என்றார். அதற்கு என் தந்தை அமிதாப், " தினம் காலை கண்விழித்து விடியலை பார்க்கும் ஒவ்வொரு நபரும், இந்த உலகில் தனக்கான இடத்தை பிடிக்க போராடியே ஆக வேண்டும். எனவே உனக்கென்று வரும் வாய்ப்புகளை விட்டு விடாமல், நடிக்கும் எல்லா கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வழங்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்து. முடியவில்லை என்று எதையும் பாதியிலேய விட்டுவிடும் பழக்கம் கொண்டவனாக நான் உன்னை வளர்க்கவில்லை. தொடர்ந்து சிறப்பான நடிப்பை வழங்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து முயற்சி செய். நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்"என்று நம்பிக்கை ஊட்டினார்.

அவரின் இந்த பேச்சு எனக்கான இடத்தை நான் பெறுவதற்கு உந்து சக்தியாக மாறியது. தந்தையின் எழுச்சியூட்டும் வார்த்தைகள் எனது மன உறுதியை அதிகரித்தது என்று அபிஷேக் மனம் திறந்துள்ளார்.
தற்போது அபிஷேக் நடித்து வெளிவந்துள்ள The Big Bull திரைப்படம், 1980 முதல் 1990 வரை 10 ஆண்டுகள் நிதிக் குற்றங்களில் பங்குதாரராக இருந்த ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை விளக்கும் வகையில் உள்ளது. இதில் அபிஷேக் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: