’ஹீரோ ராமனும் இல்ல, ராவணனும் இல்ல’ - கலர்ஸ் தமிழில் இன்று முதல் ’அபி டெய்லர்’!

அபி டெய்லர்

தமிழில் முன்னணி பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் ‘அபி டெய்லர்’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 10 மணிக்கு புத்தம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘அபி டெய்லர்’ சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் ஒளிபரப்பாகும் இந்த புதிய சீரியலில் ரேஷ்மா முரளிதரன் தையற்கலைஞராக வரும் ‘அபிராமி’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறு நகரத்தில் டெய்லராக வேலை செய்யும் அபிராமியின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் திருப்பங்களைக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. கதையில் அபிராமியின் தந்தையாக வரும் சுந்தரமூரத்தி கதாபாத்திரத்தில் பிரபல காமெடியன் படவா கோபி நடிக்கிறார். தங்கையாக ஆனந்தி கதாபாத்திரத்தில் ஜெயஸ்ரீ நடிக்கிறார்.

பிரபல ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபராக மதன் பாண்டியன் நடிக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தந்தையையும், தங்கை ஆனந்தியையும் கவனித்துக்கொள்ளும் அபிராமி வசிக்கும் இடத்தில் தொழிலதிபர் அசோக் (மதன்பாண்டியன்) கம்பெனி ஒன்றை தொடங்குகிறார். அப்போது, அங்கு வசிக்கும் தையற்கலைஞராக இருக்கும் அபிராமிக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதல் எப்படி காதலாக மாறுகிறது? இதன் பின்னணியில் நடைபெற இருக்கும் சுவாரஸ்யங்கள் என்ன? என்பதே இந்த தொடரின் சுவாரஸ்யமான கதையாகும். காதலும், மோதலும் இருக்கும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெறும் என நாடகக் குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அபி டெய்லர் குறித்து அண்மையில் பேசிய கலர்ஸ் தமிழின் பிஸ்னஸ் தலைவர் அனூப் சந்திரசேகரன், “மனதை தொடுகின்ற நிகழ்வுகளோடு நிஜமான, யதார்த்தமான, அழுத்தம் திருத்தமான கதைகளை இவற்றின் மூலம் நாங்கள் உயிர்ப்புள்ளதாக எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம்.

Also Read: தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சாண்டி - கியூட் புகைப்படங்கள்!

எங்களது வாக்குறுதியைப் பின்பற்றும் வகையில், தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய அளவுகோல்களை நிறுவுகின்ற மற்றுமொரு அற்புதமான நெடுந்தொடர் புதினத்தை இப்போது நாங்கள் வழங்குகிறோம். அனைத்து வீடுகளிலும் பேசப்படும் பெயராக அபி உருவெடுப்பாள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். உலகமெங்கும் தமிழ் பேசும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை இந்நிகழ்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை,” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Also Read: பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த ட்விஸ்ட்.. வைரலாகும் புகைப்படம்!

ரசிகர்களின் மனதில் டெய்லராக வரும் ‘அபி’ இடம்பிடிப்பாளா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: