Aarthi Ramkumar : கோவிட்-19 இரண்டாம் அலை விரைவில் ஓயும், எனினும் அலட்சியம் கூடாது - நடிகை ஆர்த்தி ராம்குமார்!

ஆர்த்தி ராம்குமார்

ராஜபார்வை மற்றும் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை ஆர்த்தி ராம்குமார் கரும்பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வீரியமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 1 வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சுகாதார துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இதுவரை இல்லாத அளவு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவிட் பீதியிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிகம் பரவி வருவது மக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஆர்த்தி ராம்குமார் கடந்த ஆண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் ராஜலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் பானுமதி என்ற கேரக்டரிலும் நடிக்கிறார்.

ALSO READ | ‘கடைசியா ஒருதடவை முகத்தை கூட பார்க்க முடியல..’கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மாற்றிகொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி

ராஜபார்வை சீரியலில் மஹாலக்ஷ்மி என்ற கேரக்டரிலும், சன் டிவியின் மின்னலே சீரியலில் வர்ஷா மற்றும் கங்காவின் தாயாக மங்களம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தவிர அன்புடன் குஷி மற்றும் மலர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களில் தோன்றியுள்ளார்.

வெள்ளித்திரையில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த "பாரிஸ் ஜெயராஜ்" திரைப்படத்திலும் நடிகை ஆர்த்தி ராம்குமார் தோன்றியுள்ளார். மே முதல் வாரத்தில் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை நடிகை ஆர்த்தி ராம்குமார் பெற்றார். இந்நிலையில் நடிகை ஆர்த்தி ராம்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில், கோவிட்-19 இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற தனது கணிப்பை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ALSO READ | கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்றுக்கு ஆளான முதல்நபர்..மருத்துவர்கள் அதிர்ச்சி.. அறிகுறிகள் என்ன?

வேகமாக பரவி வரும் மற்றும் மரண அபாயத்தை ஏற்படுத்த கூடிய கரும்பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று குறித்து ரசிகர்களை எச்சரிதுள்ளார். "2 வது அலை கோவிட் மே இறுதிக்குள் முடிவடையும், பிறகு மே மாதத்திற்கு பிறகு நாம் கவனக்குறைவாக இருக்கலாம் என்று அர்த்தமல்ல.

 

 




 

 

ஏனென்றால் அதன் பிறகு கோவிட் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைவரும் மிக எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். கொரோனாவை தொடர்ந்து ஏற்பட்டு வரும் கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று உள்ளிட்டவற்றிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ALSO READ | மருத்துவர்கள் பேச இனி கஷ்டம் இல்லை...மைக்குடன் கூடிய மாஸ்க்கை வடிவமைத்து கேரள மாணவர் அசத்தல்!

மேலும் அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். வீட்டிலேயே இருங்கள் மற்றும் விழிப்புடன் இருங்கள்" என்று அனைவரையும் கேட்டு கொண்டுள்ளார் நடிகை ஆர்த்தி ராம்குமார்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: