Home /News /entertainment /

ஆரி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் - பிரபல இசையமைப்பாளர் கருத்து

ஆரி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் - பிரபல இசையமைப்பாளர் கருத்து

பிக்பாஸ்

பிக்பாஸ்

தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனின் டைட்டில் வின்னர் ஆரி தான் என பிரபல இசையமைப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்த வாரம் அனிதா, ஆரி, பாலா, ஷிவானி, ஆஜித், ரியோ, ரம்யா, சோம் மற்றும் கேபி ஆகிய 9 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியே சென்றுவிடுவார்.

ஆரி, பாலாஜி, ரியோ ஆகிய மூவரில் ஒருவர் தான் இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வாய்ப்பிருக்கிறது என பார்வையாளர்கள் கணித்திருக்கும் நிலையில் ஆரி தான் டைட்டில் வின்னர் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது, “ஆரி டைட்டில் வின்னர். அது வேறு விஷயம். ஆனால் வீட்டில் அனைவரின் பகையைத் தேடிக் கொண்டு அதை எப்படி சிறப்பாக சமாளிக்கிறார் என்பதைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரே வீட்டில் அனைவரும் உங்களை வெறுத்து, குற்றம்சாட்டி உங்களுக்கு எதிராக திட்டம் தீட்டி செயல்படும்போது என்னால் அதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அதை எல்லாம் 75 நாட்களாக சமாளித்து ஆரி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே ஆச்சர்யம் தான். அவரைச் சுற்றியிருப்பவர்கள் அவரை விமர்சனரீதியாக தாக்குதல் நடத்துகிறார்கள்.



வெளியுலக தொடர்பின்றி வழக்கமான உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. ஈகோ அதிகம் வெளிப்படுகிறது. சுயமரியாதை போராட்டம் நடக்கிறது. ஆனாலும் ஆரியுண் எண்ணங்கள், அவரது திட்டம், உத்தியைப் பார்க்கும் போது இரும்பு மனிதனைப் போல இருக்கிறார். சிலருக்கு அது எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவரைப்பார்த்து நான் வியக்கிறேன்” இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்...
Published by:Sheik Hanifah
First published:

Tags: Aari Arjunan, Bigg Boss Tamil 4

அடுத்த செய்தி