ஆரவ் நாயகனாக நடித்துள்ள ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண் கடைசியாக ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருந்தார். வினய் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இந்தப் படத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் நாயகனாக நடிக்கிறார்.
வட சென்னை பெண் ரவுடி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும், காவ்யா தாப்பர், நிகிஷா படேல், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.
2017-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் ஆயிரத்தில் இருவர் என்ற படம் வெளியான நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படம் வெளியாகிறது.
Watch Also:
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.