Home /News /entertainment /

அமீர் கொடுத்த டார்ச்சரில் அதிரடி முடிவெடுத்த பாவ்னி.. அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

அமீர் கொடுத்த டார்ச்சரில் அதிரடி முடிவெடுத்த பாவ்னி.. அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி

சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி

Aamir Pavni | சமீபத்தில் கூட பிக் பாஸ் அல்டிமேட்டில் கூட இருவருக்கும் இடையே ஏதோ இருப்பதாகவே ரசிகர்கள் நம்பினர். ஆனால் பாவ்னி அமீர் தனக்கு சிறந்த நண்பர் மட்டுமே என சொல்லி வருகிறார்.

சின்னத்திரை ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுக்க சேனல்கள் பல விதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவி கடந்த 5 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது. சண்டைகள், சச்சரவுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்த நிகழ்ச்சியில் வெறும் சண்டைக்கு மட்டுமில்லை ரொமான்ஸூக்கும் பஞ்சம் இருக்காது. ஆரவ் - ஓவியா, அபிராமி - முகென், யாஷிகா ஆனந்த் - மகத், கவின் - லாஸ்லியா, பாலாஜி - ஷிவானி என சீசனுக்கு ஏதாவது ஒரு ஜோடிக்கு காதல் பற்றிக்கொண்டதாக வதந்திகள் கொளுந்துவிட்டு எரியும்.

அப்படி கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் இருவர் மட்டும் அதிக கவனத்தை ஈர்த்தனர். சீரியல் நடிகை பாவ்னி ரெட்டியும், வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த டான்ஸர் அமீரும் தான் அது. அமீரின் என்ட்ரிக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதல் ட்ராக் ஆரம்பமானது. முந்தைய சீசன்களில் எல்லாம் ஆண்களை பெண்கள் விரட்டி, விரட்டி காதல் மழை பொழிந்து வந்த நிலையில், இந்த சீசனில் பாவ்னியை காதலிப்பதாக அமீர் வெளிப்படையாக அறிவித்தார்.

ஒரு படி மேலே போய் பாவ்னியின் நெற்றில் அமீர் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஃபைனல்ஸ் வரை இருவரும் ஒன்றாகவே இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் எல்லா பேட்டிகளிலும் அமீர், பாவ்னியை காதலிப்பது நிஜம் என்றே கூறி வந்தார். சமீபத்தில் கூட பிக் பாஸ் அல்டிமேட்டில் கூட இருவருக்கும் இடையே ஏதோ இருப்பதாகவே ரசிகர்கள் நம்பினர். ஆனால் பாவ்னி, அமீர் தனக்கு சிறந்த நண்பர் மட்டுமே என சொல்லி வருகிறார்.

Read More : விஜய் டிவி சீரியலால் சூர்யா படத்திற்கு வந்த சோதனை.. கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பாவ்னி, அமீர் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இருவரும் நடனத்திலும் கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் உள்ளனர். நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜூ தொகுத்து வழங்கி வருகின்றனர். 
View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)


 

அமீர் ஒரு டான்சர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறார். அதற்காக தனது ஜோடியான பாவ்னிக்கும் கடுமையாக பயிற்சி கொடுத்து நடனமாட வைத்திருகிறார். இந்நிலையில் தங்களது பயிற்சி வீடியோவை பாவ்னி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அமீர் பாவ்னியை பயிற்சிக்காக தயார்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதில் பாவ்னிக்கு கடுமையான உடற்பயிற்சிகளை எல்லாம் கொடுத்து அமீர் தயார்படுத்துகிறார். இதனால் நொந்து போன பாவ்னி, இவரை மாற்றுவதற்கு என்ன விதிமுறை என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்கள் வலிக்கான வெற்றி கிடைக்கும் என வாழ்த்தியுள்ளனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Entertainment, Vijay tv

அடுத்த செய்தி