Home /News /entertainment /

போலீஸுக்கு சொல்ல முடியுமா? உதவி கோரிய நடிகை மும்தாஜ் வீட்டிலிருந்த பணிப்பெண்- சென்னையில் பரபரப்பு

போலீஸுக்கு சொல்ல முடியுமா? உதவி கோரிய நடிகை மும்தாஜ் வீட்டிலிருந்த பணிப்பெண்- சென்னையில் பரபரப்பு

மும்தாஜ்

மும்தாஜ்

சென்னை அண்ணா நகரிலுள்ள நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் காவல்துறையில் திடீரென உதவி கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். இவர் மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் தற்போது அண்ணாநகர் H பிளாக் 2வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் அவரது வீட்டிலிருந்து வெளியேறி காவல்துறையிடம் உதவி கேட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மும்தாஜ் வீட்டில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முஜூதீன்(23) என்பவர் கடந்த 6 வருடங்களாக பணிப் பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று காலை சென்னை அண்ணாநகர் H பிளாக் பகுதியில் பொதுமக்களிடம் காவல் துறைக்கு தகவல் சொல்லி தனக்கு உதவ முடியுமா? என கேட்டுள்ளார். அதன்பேரில் பொதுமக்கள் காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100க்கு கால் செய்து தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்த அண்ணாநகர் போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் முஜூதீன் மற்றும் அவரது தங்கை அங்கு பணிப்பெண்களாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாக தனக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் மேலும் மொபைல் போன் பேசுவதற்கும், டிவி பார்ப்பதற்கும் அனுமதி அளிக்கவில்லை எனவும் அதனால் எனக்கு அங்கு வேலை பார்க்க பிடிக்கவில்லை எனவும் தன்னை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து விடுமாறும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை மும்தாஜ் வீட்டிற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில், "அவரது தங்கையும் இங்கு பணிபுரிந்து வருவதாகவும், அக்கா தங்கை பிரச்னையில் அவர் இங்கிருந்து செல்ல நினைப்பதாகவும் இருவரையும் நாங்கள் எங்கள் வீட்டு பெண்களாகவே கருதி வருவதாகவும்  நடிகை மும்தாஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு நிதியை வழங்கிய மதுரை சிறுவன்

மேலும் தங்கையுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பெண், தான் நடிகை மும்தாஜ் வீட்டிலேயே தங்கி கொள்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து முஜூதீனை மீட்ட அண்ணாநகர் போலீசார் பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும், அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னைக்கு வர சொல்லி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த பணிப் பெண் தனக்கு உதவும்படி காவல் நிலையத்தை நாடிய சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Mumtaj

அடுத்த செய்தி