தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது உலக அளவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இந்தியாவிலிருந்து இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று வந்த ஏ.ஆர்.ரகுமான் இசைத்துறையில் சாதிக்க முழுமுதற்காரணமும் அவரது தாயார் கரீமா பேகம் தான். ஏ.ஆர்.ரகுமான் இசைத்துறையை தேர்வு செய்யவும், இஸ்லாத்துக்கு மாறவும் காரணமாக இருந்த கரீமா பேகம் மீது ஏ.ஆர்.ரகுமான் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கரீமா பேகம் இன்று காலை உயிரிழந்தார். அவரது மரணம் குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. தனது தாயாரின் புகைப்படத்தை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதை அடுத்து திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில், “தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆறுதல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.