ஒரே பாடலில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் - அனிருத்- ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளர்கள்அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்

சர்வம் தாளமயம் படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய மூவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வம் தாளமயம் படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய மூவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன. படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த 23-ம் தேதி படத்தின் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இதுவரை இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.



இந்த நிலையில் ‘பீட்ட்ர் பீட்டு ஏத்து’ என்ற 3-வது பாடலை இசையமைப்பாளர் அனிருத் நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் இந்தப் பாடலை பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருப்பதன் மூலம் ஒரே பாடலுக்காக மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்திருக்கின்றனர்.

பயிர்த்தொழில் பழகு | தென்னை| தென்னையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்தல் - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: