ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘தரணி ஆள வா தளபதி’... ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட விஜய் டி.பி!

‘தரணி ஆள வா தளபதி’... ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட விஜய் டி.பி!

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ம் தேதியும், இரண்டாவது போஸ்டர் 22-ம் தேதி நள்ளிரவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பொதுவான புரொஃபைல்(common DP) புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயை ரசிகர்கள் தளபதி என்றே அழைத்து வருகின்றனர். ஜூன் 22-ம் தேதி 44-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கும் தற்காலிகமாக தளபதி 63 என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து போட்டியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ம் தேதியும், இரண்டாவது போஸ்டர் 22-ம் தேதி நள்ளிரவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

  இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் விஜய் பிறந்தநாளுக்கான பொதுவான புரொஃபைல் புகைப்படம் ஒன்றை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அதில், ‘தரணி ஆள வா தளபதி’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

  வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: A.R.murugadoss, Acor Vijay