ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியை அடுத்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் முருகதாஸ்!

ரஜினியை அடுத்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் முருகதாஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் முருகதாஸ் கடைசியாக விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்துடன் இணைந்துள்ள இயக்குநர் முருகதாஸ், அடுத்ததாக பிரபல ஹீரோவுடன் கைகோர்க்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் முருகதாஸ் கடைசியாக விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார். அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் முருகதாஸ் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூனை ஹீரோவாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ஸ்டாலின் என்ற படத்தை இயக்கினார். பின்னர் இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவை ஹீரோவாக வைத்து ஸ்பைடர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் முருகதாஸ் இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    நான் ஒன்னும் அமெரிக்க ரிட்டர்ன் கிடையாது - ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேட்டி

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: A.R.murugadoss, Rajinikanth