ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி படத்துக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!

ரஜினி படத்துக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார் நயன்தாரா

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ரஜினிகாந்த் படத்துக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த வெற்றி திரையரங்க நிர்வாக இயக்குநர் ராகேஷ் கவுதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

தேர்தல் வருது பாடல் சாமானியர்களுக்கானது - டி.இமான் பேட்டி

First published:

Tags: AR Murugadoss, Rajinikanth