Unseen Pic : மெட்டி ஒலி நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம்!

மெட்டி ஒலி

தாய் இல்லாத 5 பிள்ளைகளை வளர்க்கும் தந்தை படும் துன்பங்கள், அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பெண்களிடையே கண்ணீரை வரவழைத்தது.

  • Share this:
மெட்டி ஒலியில் நடித்த நடிகைகள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சன்டிவியில் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்தது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் பெரும் வெற்றியை பெற்ற மெட்டி ஒலி தொடர், முத்திரை பதித்த தொடர்களில் முதன்மை இடத்தையும் பிடித்தது. இன்றளவும் இந்த சீரியலைப் பற்றி பேசுபவர்கள் நிறையபேர் உள்ளனர். அந்தளவுக்கு அந்த சீரியலின் கதையம்சம் மற்றும் நடிகர், நடிகைகளின் நடிப்பு மக்களை சென்றடைந்தது. ரசிகர்களின் வரவேற்பு இருக்கிறது என தெரிந்துகொண்ட சன் தொலைக்காட்சி, 2008 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அந்த தொடரை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்தது. ஒரே தொடர் இருமுறை மறு ஒளிபரப்பானது மெட்டி ஒலி மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, காயத்தி சாஸ்திரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜகாந்த், திருமுகன் சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். நாடகத்தை திருமுருகன் இயக்கினார். மேலும், கோபி என்ற கதாப்பாத்திரத்தில் தானே நடித்து சின்னத்திரையில் முத்திரையும் பதித்தார். 811 எபிசோடுகளுடன் கதை நிறைவு பெற்றது. 2000 ஆம் ஆண்டின் தொடகத்தில் குடும்பங்களுக்குள் இருக்கும் சிக்கலை பட்டவர்த்தனமாக இந்த சீரியல் வெளிக்காட்டியது. தாய் இல்லாத 5 பிள்ளைகளை வளர்க்கும் தந்தை படும் துன்பங்கள், அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பெண்களிடையே கண்ணீரை வரவழைத்தது.

அக்கா, தங்கை பாசம், அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை, தந்தையின் வாழ்வாதாரத்தை நினைத்து உருகும் பிள்ளைகள், தங்கைகளுக்காக அக்கா செய்யும் தியாகம் அனைத்தும் ஒவ்வொருவரையும் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை கண்முன்னே பார்ப்பதுபோல் ரசிகர்களுக்கு அமைந்தது. 
View this post on Instagram

 

A post shared by Tamilengineer (@tamil.engineer)


புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்கள் அங்கு நடைபெறும் துன்பங்களை சகித்துக்கொண்டு வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் பாங்கு, தந்தை மற்றும் அக்காவுக்கு தாங்கள் படும் கஷ்டங்கள் தெரியக்கூடாது என்பதற்காக வெளிக்காட்டும் பாசாங்கு என கதையை வடிவமைத்த விதம் இயக்குநர் திருமுருகனை சின்னத்திரையின் ஸ்டார் இயக்குநர் என்ற உச்சத்தை தொட வைத்தது.

Also read... Anbudan Kushi: 300-வது எபிசோடை கேக் வெட்டி கொண்டாடிய 'அன்புடன் குஷி' டீம் - ரசிகர்களுக்கு நன்றி!

இந்நிலையில், மெட்டி ஒலியில் நடித்த நடிகைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், காவேரி, காயத்திரி சாஸ்திரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா உள்ளிட்ட அனைத்து பெண் கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகைகளும் இருக்கின்றனர். தாங்கள் விரும்பிய குடும்பக் கதையில் நடித்த நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் இல்லதரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். என்ன கதாப்பாத்திரங்களில் அவர்கள் நடித்தார்கள் என்பதை தாங்களாகவே மீண்டும் ஒருமுறை கைநீட்டி காட்டி மெட்டி ஒலி சீரியல் அனுபவத்தையும் முனுமுனுக்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: