Home /News /entertainment /

குயின் படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

குயின் படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

  • News18
  • 1 minute read
  • Last Updated :
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா'வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடர் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைபடத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அதேபோல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Queen

அடுத்த செய்தி