செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்குநர் கௌதம் மேனன் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காலை 5 மணிக்கு திரையரங்குக்குச் சென்று பார்த்த இயக்குநர் கௌதம் மேனன், படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ``இயக்குநர் மணிரத்னத்தின் புத்திசாலித்தான நடிகர் பட்டாளம், திரையை ஜொலிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓர் அற்புதமான கலைஞனின் பணி இது. கடினமான உள்ளடக்கத்தை படமாக்குவதில் அவரிடம் குதூகலம் தென்படுகிறது. விதிமுறைகளை தகர்த்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
Mani sir& his brilliant ensemble cast set the screens on fire with a bold new character sketch in cinema for each of the characters. A master craftsman at work& it’s almost like he’s having fun etching out hard hitting content& throwing all rules out the window!
CCV-RUSH(for it)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.