Home /News /entertainment /

OTT: ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட திரைப்படங்கள் ஒரு பார்வை...!

OTT: ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட திரைப்படங்கள் ஒரு பார்வை...!

தனுஷ் - ஜகமே தந்திரம்

தனுஷ் - ஜகமே தந்திரம்

திரையரங்குகள் திறப்பது மேலும் தள்ளிப்போகும் என்ற நிலையில் அதிகபடியான படங்கள் ஓடிடி நோக்கி படையெடுக்கின்றன.

  • News18
  • Last Updated :
கொரோனா ஊரடங்குக்கு முன்பு இந்தியாவில் ஓடிடி தளங்கள் கொரோனா வைரஸ் அளவுக்கே இருந்தன. சொற்ப எண்ணிக்கையினரே ஓடிடியை பயன்படுத்தினர். ஊரடங்குக்குப் பிறகு விலைவாசியைப் போல் ஓடிடி தளங்கள் பெருகி விட்டன.  திரையரங்குகளை ஸ்வாகா செய்யும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. ஓடிடியில் அதிகம் சம்பாதித்த சில படங்களைப் பார்க்கலாம்.

தமிழைவிட மலையாளப் படங்களே அதிகளவில் ஓடிடியில் வெளியாகின்றன. மலையாள சினிமாக்களின் சந்தை மிகச்சிறியது. சில கோடிகள் மட்டுமே பெறும். ஓடிடியில் மலையாளப் படங்களை மலையாளிகள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப் பேசும் மக்கள் பார்க்கிறார்கள். திரையரங்கில் கிடைக்கும் வருமானம் ஓடிடியிலேயே கிடைத்துவிடுகிறது. இதனால், படங்களின் பட்ஜெட்டைப் பொறுத்து மோகன்லால், பகத் பாசில், பிருத்விராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்துக்கு அமேசான் பிரைம் வீடியோ சுமார் 30 கோடிகளை கொடுத்துள்ளது. இது நேரடி ஓடிடி வெளியீடு. தெலுங்கு, கன்னடம், இந்தி ரீமேக் உரிமைகள் மூலமும் இந்தப் படத்துக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. தற்போது அரபு நாடுகளில் திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ளது. 2021 பொறுத்தவரை மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய படமாக த்ரிஷ்யம் 2 உள்ளது.

இந்த வருடம் ஓடிடியில் நேரடியாக வெளியான மற்றுமொரு மலையாளப் படம் இருள். பகத் பாசில், சௌபின் ஷகிர் நடித்திருந்த இந்த ஹாரர் படம் சின்ன முதலீட்டில் எடுக்கப்பட்டது. சுமார் 8 கோடிகளுக்கு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியது. படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. பகத் நடிப்பில் தில்லீஸ் போத்தன் இயக்கத்தில் வெளியான ஜோஜி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இவர்களின் முந்தையப் படங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் ஜோஜியை அதிகம் பேர் பார்த்தனர். அமோக வரவேற்பு. ஓடிடிக்கு என்றே ஊரடங்கின் போது அதிக செலவில்லாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை சுமார் 7 கோடிகளுக்கு அமேசான் வாங்கியிருந்தது.

ஜுன் 30 ஆம் தேதி பிருத்விராஜின் கோல்ட் கேஸ் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இதுவும் சின்ன முதலீட்டில் எடுக்கப்பட்டதே. திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போனதால் 7 கோடி ரூபாய்க்கு அமேசானுக்கு கைமாற்றினர். சுமாரான வரவேற்பை படம் பெற்றுள்ளது. திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டது தயாரிப்பாளரின் புத்திசாலித்தனமான முடிவு.

Also read... Sara's - புனித பிம்பத்தின் மீது எறியப்பட்ட கல்...!

ஜுலை 15 ஆம் தேதி பகத் பாசில் நடித்துள்ள மாலிக் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகிறது. பகத் பாசிலின் இருள் 8 கோடிக்கும், ஜோஜி 7 கோடிக்கும் வாங்கப்பட்ட நிலையில் மாலிக்கிற்கு 18 கோடிகள் கொடுத்திருக்கிறார்கள். முந்தைய இரு படங்கள் ஓடிடிக்கு என்றே அதிக செலவில்லாமல் எடுக்கப்பட்டவை. மாறாக மாலிக் பெரிய பட்ஜெட்டில் திரையரங்கில் வெளியிட எடுக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிப்பால் வேறு வழியின்றி தயாரிப்பாளர் படத்தை ஓடிடிக்கு தந்துள்ளார். பகத் பாசிலின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

மோகன்லாலின் மரக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் திரையரங்கில் வெளியாவது உறுதி. ஆகஸ்டில் ஒருவேளை திரையரங்குகள் திறக்கப்படாதபட்சத்தில் வெளியீடு தள்ளிப்போகுமே தவிர நேரடியாக ஓடிடிக்கு வர வழியில்லை. அதேநேரம் படம் வெளியாகி 42 தினங்களுக்குப் பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோகன்லாலின் மெகா பட்ஜெட் படமான இதற்கு, திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடியில் வெளியிட சுமார் 27 கோடிகள் தரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.ஒரு மலையாளப் படத்துக்கு இது அதிகபட்ச தொகை

இந்தியை எடுத்துக் கொண்டால் நேற்று முன்தினம் தாப்ஸியின் ஹசீன் தில்ரூபா வெளியானது. ஜுலை 6 காலர் பாம் திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இவை தவிர மேலும் பல படங்கள் ஓடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

மலையாளம், இந்தி அளவுக்கு தமிழின் முக்கியமான படங்கள் ஓடிடிக்கு வரவில்லை. இந்த வருடத்தின் முக்கியமான நேரடி ஓடிடி வெளியீடு தனுஷின் ஜகமே தந்திரம். நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை சுமார் 55 கோடிகளுக்கு வாங்கியது. படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனினும் ஒரு வாரத்திற்கு நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பட்டியலில் ஜகமே தந்திரம் இருந்தது. இன்றும் டாப் 10 இல் இடம் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நேரடியாக வெளியிடுகிறது. இதற்கு சுமார் 42 கோடிகள் பேசப்பட்டுள்ளது. சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகள் தனி. சூரரைப்போற்று, ஜகமே தந்திரம் படங்களுக்குப் பிறகு தமிழில் நேரடி ஓடிடி வெளியீட்டிற்கு அதிக தொகை பெறும் படம் இது

Also read... Sara's - புனித பிம்பத்தின் மீது எறியப்பட்ட கல்...!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஓடிடிக்கு வந்தது. தெலுங்கிலும் படத்தை டப் செய்து அமேசான் வெளியிட்டுள்ளது. திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடியில் வெளியான தமிழ்ப் படங்களில் மாஸ்டருக்கே அதிக தொகை தரப்பட்டது. சுமார் 40 கோடிகள் மாஸ்டருக்கு அமேசான் நிறுவனம் அளித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

திரையரங்குகள் திறப்பது மேலும் தள்ளிப்போகும் என்ற நிலையில் அதிகபடியான படங்கள் ஓடிடி நோக்கி படையெடுக்கின்றன. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ், மணிகண்டன் இயக்கியிருக்கும் கடைசி விவசாயி, கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஆகியவை நேரடியாக சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸ், அமேசன் பிரைம் வீடியோ ஆகிய தளங்களும் அதிக தமிழ்ப் படங்களை நேரடியாக வெளியிடும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனவிரைவில் ஒவ்வொரு படமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: OTT Release

அடுத்த செய்தி