• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புத்தகமாக வெளியாகும் விஜய் சேதுபதியின் ’96’ தனிப்பெருங்காதல்’

புத்தகமாக வெளியாகும் விஜய் சேதுபதியின் ’96’ தனிப்பெருங்காதல்’

த்ரிஷா, விஜய் சேதுபதி

த்ரிஷா, விஜய் சேதுபதி

‘96’ படம் குறித்த புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் சி.சரவண கார்த்திகேயன் எழுதியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
‘96’ படம் குறித்த புத்தகம் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. சமீபத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் குறித்த புத்தகம் ஒன்றை எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன் எழுதியுள்ளார்.

ராம்களும், ஜானுக்களும் இங்கே இருப்பதால் தான் இந்தப் படம் பெரு வெற்றி. ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதன் செல்வாக்குக்குக் காரணம். எவ்வகையில் என்றாலும் நம் தமிழர்கள் காதலின் ஆன்மாவுக்கு வெகு அருகிலான படம் இது என்று 96 படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்க பதிவொன்றில் எழுத்தாளர் சி.சரவண கார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார்.





96 தனிப்பெருங்காதல் என்ற இந்தப் புத்தகத்தை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகம் குறித்து படத்தின் இயக்குநர் பிரேம்குமார் பேசுகிறார். புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பட்டினியா இருந்து பாருங்க... அப்போ தெரியும் வலி” - இடைநிலை ஆசிரியர் கண்ணீர் பேட்டி - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: