Home /News /entertainment /

விஜய் சேதுபதியின் பணம் எனக்கு வேண்டாம்... விலகிக் கொண்ட விஷால்!

விஜய் சேதுபதியின் பணம் எனக்கு வேண்டாம்... விலகிக் கொண்ட விஷால்!

விஜய் சேதுபதி| விஷால்

விஜய் சேதுபதி| விஷால்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    `96’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி ரத்தானதற்கு நடிகர் விஷால்தான் காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், விஷால் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

    விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தை இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி கேடிஎம் பிரச்னை காரணமாக ரத்தானது. இதனால் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.

    காலைக்காட்சி ரத்தானதற்கு காரணம் நடிகர் விஷால்தான் என்று கூறப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் நந்த கோபால் விஷாலுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிடலாம் என்று விஷால் தரப்பினர் கூறியுள்ளனர். இதையறிந்த நடிகர் விஜய்சேதுபதி, ரூ.1.50 கோடியை விஷாலுக்கு தருவதாக கூறியதை அடுத்து படம் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் தரப்பினர் கூறுகையில், ``விஷால் அவர்கள் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.

    தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை அவரிடமே பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளார். நந்த கோபால் பணத்தை திரும்பத் தரும் வரை  அந்தத் தொகைக்கு விஷால் வட்டியும் செலுத்துவார்.

    ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். மேலும், இந்தப் பிரச்னையிலிருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: 96 movie, Vijay sethupathi, Vishal

    அடுத்த செய்தி