ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

`96’ ஜானுவுக்கு அடித்த ஜாக்பாட் - வெளியானது அடுத்த பட அறிவிப்பு

`96’ ஜானுவுக்கு அடித்த ஜாக்பாட் - வெளியானது அடுத்த பட அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதியுடன் கௌரி

நடிகர் விஜய் சேதுபதியுடன் கௌரி

’96’ படத்தில் த்ரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

‘96’ படத்தில் த்ரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் 96. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளனர். நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. பள்ளிக்காதலை இந்தப் படம் பேசுவதால் படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

மேலும் படத்தில் விஜய்சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். அதேபோல் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் கௌரி நடித்துள்ளார். படத்தைப் பார்த்தவர்கள் த்ரிஷா, விஜய் சேதுபதியை பாராட்டுவது போல், ஆதித்யா பாஸ்கர், கௌரியையும் பாராட்டி வருகின்றனர்.

கௌரி அடுத்ததாக என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த நிலையில் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கௌரி நடிக்க இருக்கும் இந்தப் படத்துக்கு அனுகிரஹித்தன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்குகிறார். மேலும் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். 2019 ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி....மரத்தில் கட்டி வைத்து அடி உதை - வீடியோ

First published:

Tags: 96 movie, Gauri kishan