‘96’ படத்தின் மூலம் கவனம்பெற்ற கௌரி கிஷன் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 100 நாட்களைக் கண்டு வெற்றிபெற்ற படம் ‘96’. பள்ளிப்பருவ காதலை பேசிய இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் முக்கியமான ஒரு காரணம், இள வயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான். சிறுவயது விஜய்சேதுபதியாக ஆதித்யா பாஸ்கரும், சிறுவயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர். இவர்களது நடிப்பு ரசிகர்களையும் தாண்டி திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோரின் பாராட்டுகளை பெற்றது.
சவுந்தர்யா திருமண வரவேற்பில் தனுஷ் ஏன் ஆர்வம் காட்டவில்லை தெரியுமா?
இருவரும் தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் நடிகர்களாக ஒப்பந்தமாகி தமிழ் சினிமாவை வலம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கௌரி கிஷனுக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
My first step into the Malayalam film industry.
Blessings needed all the way!
On sets of #AnugraheethanAnthony with @SunnyWayn pic.twitter.com/8GJrq4mbR7
— Gouri G Kishan (@Gourayy) February 7, 2019
துஸார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பில் பிப்ரவரி 7-ம் தேதி கௌரி கிஷன் இணைந்துள்ளார். இதனைக் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையின்போது வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பேராசிரியரை கிண்டலடித்து ’டிக்டாக்’ வீடியோ...! 3 மாணவர்கள் சஸ்பெண்ட் - வீடியோ
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 96 movie