ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’96’ ஜானு கேரக்டரில் நடிக்கும் அஜித் பட ஹீரோயின்?

’96’ ஜானு கேரக்டரில் நடிக்கும் அஜித் பட ஹீரோயின்?

த்ரிஷா, விஜய் சேதுபதி

த்ரிஷா, விஜய் சேதுபதி

96 பட கன்னட ரீமேக்கில் நடிகை பாவனா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

96 பட கன்னட ரீமேக்கில் நடிகை பாவனா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்தனர்.

நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. பள்ளிக்காதலை இந்தப் படம் பேசுவதால் படத்தை பார்த்த பார்வையாளர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதனால் படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதற்காக 99 என்று படத்தின் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிகர் கணேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை ப்ரீதம் குபி என்பவர் இயக்கவுள்ளார்.

கன்னட மொழியில் ரீமேக்காகும் ‘99’ படத்துக்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க சந்தோஷ் ராஜ் பாதஜா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். த்ரிஷாவின் கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகை பாவனா இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்த அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பாவனா கணேஷுக்கு ஜோடியாக ரோமியோ என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி 26 | விஜய்யின் திரை பயணத்தை மாற்றியமைத்த 26 தருணங்கள் - வீடியோ

First published:

Tags: 96 movie