கிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு நான் பெருமை கொள்ளும் படைப்பு : தயாரிப்பாளர் தாணு

news18
Updated: August 7, 2018, 1:20 PM IST
கிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு நான் பெருமை கொள்ளும் படைப்பு : தயாரிப்பாளர் தாணு
60 வயது மாநிறம் - பட போஸ்டர்
news18
Updated: August 7, 2018, 1:20 PM IST
இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள '60 வயது மாநிறம்' படம் குறித்து தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக 60 வயது மாநிறம் அமையபெற்றுள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் தற்போது ஜோதிகா நடிப்பில் 'காற்றின் மொழி' படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரை வைத்து 60 வயது மாநிறம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இந்துஜா, ஷரத், மதுமிதா, அருள்ஜோதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இளையராஜாவின் இசைக்கு பா.விஜய், பழநிபாரதி, விவேக் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் தாணு கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக 60 வயது மாநிறம் அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

First published: August 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்