Home /News /entertainment /

50-வது எபிசோட் கொண்டாட்டம்...‘ வள்ளி திருமணம்’ சீரியலுக்கு குவியும் வாழ்த்துகள்!

50-வது எபிசோட் கொண்டாட்டம்...‘ வள்ளி திருமணம்’ சீரியலுக்கு குவியும் வாழ்த்துகள்!

வள்ளி திருமணம்

வள்ளி திருமணம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியல் 50 எபிசோட் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியல் 50 எபிசோட் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளது. இதயத்தை திருடாதே சீசன் 2, அம்மன் சீசன் 3 என அடுத்தடுத்த பாகங்களை ஒளிபரப்பும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதேபோல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ சீரியலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கான புரோமோஷனையே வேறு லெவலுக்கு உருவாக்கி கலர்ஸ் தமிழ் தொலைகாட்சி அசத்தியிருந்தது. “காதல் பொம்மலாட்டம் ஆரம்பம்” என்ற தலைப்பில் பொம்மலாட்ட பாணியில் விளம்பரத்தையும், சென்னையின் முக்கிய பகுதிகளில் பிரம்மாண்ட விளம்பர பேனர்களையும் வைத்து தூள்கிளப்பியது.

ALSO READ :  நிறைமாத கர்ப்பத்திலும் இப்படியா? ரசிகர்களின் பாராட்டு மழையில் ஆல்யா மானசா!
 

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு தைரியமான, கோபமான மற்றும் எதற்கும் பயப்படாத ஒரு கிராமத்து பெண்மணியின் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை காட்டும் படி கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அழகும், அறிவும் நிறைந்த அடாவடி கிராமத்துப் பெண்ணாக வள்ளி என்கிற பேபிமா கதாபாத்திரத்தில் நக்ஷத்திரா நடித்துள்ளார்.

கிடா பூசாரி மகுடி என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான டஸ்கி ஸ்கின் பியூட்டி, நக்ஷ்த்திராவுக்கு சீரியல் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலமாக பிரபலமானவர் தற்போது ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்து வருகிறார்.

ALSO READ :  Maara: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மாதவனின் மாறா!

இந்த தொடரில் நக்‌ஷத்திராவிற்கு ஜோடியாக விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் புகழ், ஷ்யாம், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வள்ளியின் அம்மா வடிவு கதாபாத்திரத்தில் நளினி, குண்டுராசு என்ற கதாபாத்திரத்தில் நாஞ்சில் விஜயன், வசுந்தரா கதாபாத்திரத்தில் காயத்திரி ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஆணாதிக்கம் நிறைந்த உலகில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிற, கனிவான இதயம் கொண்டு வட்டிவிகிதத்துக்கு கடன் கொடுத்து வாங்கும் தொழில் செய்யும் ஒரு பெண்ணாக வலம் வரும் வள்ளியைச் சுற்றி நகர்கிறது. வள்ளிக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் கார்த்திக், அனைவரிடமும் மரியாதையாக, மென்மையாக பேசக்கூடிய நபர். கார்த்தி மீது வள்ளிக்கு காதல் வருகிறது. இந்த இரு எதிர்மறையான கேரக்டர்கள் எப்படி ஒன்றிணைவார்கள், எப்படி ஒரு தனித்துவமான உறவை உருவாக்குவார்கள் என்பது குறித்த விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ALSO READ :  ஒரே நாளில் இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சிவாஜி கணேசன்!

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு தோறும் 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வள்ளி திருமணம் சீரியல் 50வது எபிசோட்டை கடந்துள்ளதை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்துள்ள நக்‌ஷ்த்திரா மற்றும் ஷ்யாம் கார்த்திக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 50வது எபிசோட்டை கொண்டாடும் விதமான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள போஸ்டரும் வைரலாகி வருகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

அடுத்த செய்தி