ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்புவுக்கு 500 அடி போஸ்டர்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிம்புவுக்கு 500 அடி போஸ்டர்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிம்பு

சிம்பு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் சிம்புவுக்கு 500 அடி போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  உறவைக் காத்த கிளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, திரையுலகில் 35 ஆண்டுகள் நடிகராக பயணித்து வருகிறார். இதைக் கொண்டாடுவதற்காக மதுரையில் உள்ள ‘மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள்’ ரசிகர் மன்றம் சார்பாக 500 அடி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

  இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கையில், கமல்ஹாசன் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், அவரது முதல் படம் குழந்தை நட்சத்திரமாக நடித்த களத்தூர் கண்ணம்மா தான். அதுபோல் சிம்பு உறவைக் காத்த கிளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுதான் அவரது முதல் படம். அந்த வகையில் அவர் சினிமாவுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகின்றன.

  அந்த சாதனையைக் கொண்டாடுவதற்காக 500 அடி போஸ்டர் ஒட்டியுள்ளோம்.

  படிக்க: ஆடையின்றி நடித்த போது... மன உணர்வை வெளிப்படுத்திய அமலாபால்!

  இதற்கு முன்னர் விஜய்க்கு 440 அடியில் போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் கவனம் ஈர்த்தனர். அதைவிட பிரமாண்டமாக இருக்க 500 அடியில் போஸ்டர் ஒட்டியுள்ளோம். சிம்புவைப் போல் ரசிகர்களை மதிக்கும் ஹீரோ இருக்கவே முடியாது. அந்த மனசுக்காகத் தான் இந்த போஸ்டர் என்றனர்.

  வீடியோ பார்க்க: ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற இந்திய இயக்குநர்கள்!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Simbhu