சில நாட்களுக்கு முன்பு, சன்னி லியோனின் இண்டி-பாப் பாடலான மதுபன், ச ரே கா மா பா என்ற தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் 1960களில் முகமது ரஃபியின் கிளாசிக் பாடலால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பாடலில், சன்னி தனது அட்டகாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், நடிகையால் இந்தப் பாடலும் சர்ச்சைக்கு ஆளானது. நடிகையின் ஆபாச நடனத்தால் கிருஷ்ணரின் பிறந்த இடத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதாக வடநாட்டைச் சேர்ந்த பூசாரிகள் மற்றும் துறவிகளிடமிருந்து குற்றசாட்டு கிளம்பியது. இதனால் இந்த பாடலுக்கு பின்னடைவு கிடைத்தது. சில பிரிவினர் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என அரசாங்கத்தை அணுகியுள்ளனர். இந்த பாடல் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
Also read: நடிகை சன்னி லியோனுக்கு ம.பி அமைச்சர் எச்சரிக்கை - 3 நாட்கள் கெடு!
புத்தாண்டு பாஷ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் நடந்த புத்தாண்டு விழாவில் பங்கேற்க சன்னி லியோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்கு பிறகு பெங்களூரு போலீஸ் கமிஷனர் அவரது அனுமதியை மறுத்தார். சன்னியின் நிகழ்ச்சிக்கு கர்நாடக ரக்ஷனா வேதிகே யுவ சேனே அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி தங்கள் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று கூறி சன்னியின் போஸ்டர்களை எரித்தனர். மேலும் சன்னிக்கு போராட்டக்காரர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சன்னி புடவையில் நடித்தால் பரவாயில்லை என்று மாநிலத் தலைவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சன்னியின் ஆணுறை விளம்பர சர்ச்சை:
நவராத்திரி சமயத்தில், சன்னி லியோன் ஆணுறை பிராண்டின் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். குஜராத்தில் பொருத்தப்பட்டிருந்த அவரின் ஒரு டஜன் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடிகை ஆணுறை பிராண்டை விளம்பரப்படுத்தியதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன. 'இந்த நவராத்திரியில் அன்புடன் விளையாடு' என்ற விளம்பரத்தின் டேக் லைன் ஒரு பெரிய சீற்றத்தையே உருவாக்கியது.
Also read: தெரு நாயின் ஆண் உறுப்பை துண்டாக்கிய சைக்கோ கொடூரன்!
செலினா ஜெட்லியின் குடியிருப்பை சன்னி வாடகைக்கு எடுத்தது:
சன்னி லியோன் மற்றும் டேனியல் வெப்பர் ஆகியோர் நாட்டில் புதிதாக வந்தபோது, நடிகை செலினா ஜெட்லி தனது குடியிருப்பை அவர்களுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். மேலும் மிக மோசமான நிலையில் விட்டுவிட்டு சன்னி மற்றும் அவரது கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக முன்னாள் நடிகை செலினா குற்றம் சாட்டியிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, சன்னி தனது இடத்தை வாடகைக்கு எடுத்ததிலிருந்து செலினா பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறப்பட்டது.
கபில் சர்மா ஷோ:
சில ஆண்டுகளுக்கு முன்பு, கபில் சர்மா ஷோவில் தனது படத்தை விளம்பரப்படுத்த சன்னி நிராகரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. நடிகையுடன் படப்பிடிப்பு நடத்த கபில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு ராகினி MMS 2-ஐ விளம்பரப்படுத்த ஏக்தா கபூருடன் அவர் நிகழ்ச்சியில் தோன்றியபோது வதந்திகள் மறைந்தன.
Also read: அங்கிள் என அழைத்த 18 வயது பெண் மீது 35 வயது கடைக்காரர் சரமாரி தாக்குதல்
சன்னியின் ஒப்பந்த வதந்திகள்:
சன்னி லியோன் தனது சக நடிகர்களிடம் எச்.ஐ.வி பரிசோதனையை கேட்டுக்கொண்டதாக வதந்திகள் பரவியதால் சர்ச்சைக்குள்ளானது. எனினும், அவை உண்மைக்குப் புறம்பாக வெளியான வதந்திகள் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆதாரமற்ற வதந்திகளுக்கு சன்னி பதிலளிக்கவில்லை.
சன்னி vs கமல் ஆர் கான் சர்ச்சை:
சன்னி லியோனின் பெயர் ஒரு ட்வீட் சர்ச்சையில் சிக்கியது. நடிகையின் ட்வீட் வைரலானபோது கமல் ஆர் கான் சன்னி லியோனை கடுமையாக சாடினார். கற்பழிப்பு ஒரு குற்றம் அல்ல, இது ஒரு ஆச்சரியமான செக்ஸ் என்று சன்னி லியோன் பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Sunny Leone, Condom, Sunny Leone