ரசிகர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு ஷாரூக்கானின் 'நச்' பதில்கள்!

ரசிகர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு ஷாரூக்கானின் 'நச்' பதில்கள்!

ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுடன் ஷோசியல் மீடியாவில் உரையாடினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சல்மான்கான் எப்போதும் தன்னுடைய அன்பான சகோதரர் என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் பதில் அளித்துள்ளார்.

நடிகர் ஷாரூக்கான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுடன் ஷோசியல் மீடியாவில் உரையாடினார். சில மணி நேரங்கள் நீடித்த இந்த உரையாடலில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்தார். அதில் தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். பல்வேறு கேள்விகளுக்கு ஷாரூக்கான் பதில் அளித்துள்ள நிலையில், அவற்றில் சுவாரஸ்யமான சிலவற்றை மட்டும் இங்கு காணலாம்.

சல்மான்கான் பற்றி ஷாரூக்கான்

சல்மான்கான் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு குறித்து கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஷாரூக்கான், “As always bhai toh bhai hi hai!” என ஹிந்தியில் கூறினார். அதாவது, சல்மான்கான் எப்போதும் தன்னுடைய அன்பான சகோதரர் என கூறினார்.

பாலிவுட்டில் இருக்கும் நண்பர்கள்

ஒருமுறை காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக்கான், பாலிவுட் உலகில் இருக்கும் நண்பர்கள் குறித்து காரசாரமான பதில் ஒன்றை அளித்தார். அதாவது, பாலிவுட்டில் யாரெல்லாம் நண்பர்கள்? என ஷாரூக்கானிடம் கரண் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஷாரூக்கான், பாலிவுட்டில் தனக்கு யாரும் நண்பர்கள் இல்லை, நட்பை எப்படி தொடர்வது என்றும் தெரியவில்லை எனத் தெரிவித்தார். அதனைக் குறிப்பிட்ட ரசிகர் ஒருவர், தற்போதும் அதே நிலையில் இருக்கிறீர்களா? எனக் கேட்டிருந்தார். ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஷாரூக்கான், இல்லை நண்பர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

அமீர்கானின் சிறந்த படங்கள்

அமீர்கான் நடிப்பில் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்த அல்லது சிறந்த படங்களாக எதனை சொல்வீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அவருக்கு பதில் அளித்த ஷாரூக்கான், கயாமத் சே கயாமத் தக், தங்கல், லகன் மற்றும் 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்கள் தனக்கு விருப்பமான படங்கள் எனக் கூறினார்.

Also read... இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை குறித்து இளைஞர் எழுப்பிய கேள்விக்கு சூப்பரான அட்வைஸ் ஒன்றை ஷாருக்கான் கொடுத்தார். 23 வயதான தனக்கு வாழ்க்கை குழப்பமாக இருப்பதாக தெரிவித்த ரசிகர், எப்படி பயணிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் கொடுத்த ஷாரூக்கான், வயது என்பது ஒரு எண் மட்டுமே, உங்கள் இலக்கு நோக்கி கடினமாக உழைத்தால் நிச்சயம் எல்லாம் நன்றாக நடக்கும் எனத் தெரிவித்தார். வருடங்களை வீணாக்காதீர்கள் என்றும் கூறினார்.

பாக்ஸ் ஆபீஸ்

படங்களில் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஷாரூக்கான், பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து நிறைய பேர் ஏன் டிவிட்டரில் கேட்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். கடந்த 3 ஆண்டுகளாக ஷாரூக்கானின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சல்மான் கானுடன் அவர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பதான் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: