கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ₹ 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்.
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 80 அணைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,14,391 பேர் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2094 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 - ஆக உயர்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், முப்படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்படக் கலைஞர்களும், பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.
கேரள வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ₹ 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய்சேதுபதி ₹25 லட்சமும், கமல்ஹாசன் ₹25 லட்சமும், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ₹25 லட்சமும் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.