நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி - போலீசில் மேலாளர் புகார்
நடிகர் விஷாலின் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அவரது மேலாளர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

நடிகர் விஷால்
- News18 Tamil
- Last Updated: July 3, 2020, 11:41 AM IST
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் விஷால் சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சாலிகிராமம் ரத்தினம்மாள் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் கணக்காளராக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தங்களது நிறுவனத்திலிருந்து கணக்காளர் ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் ஒன்றை அளித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நிறுவனத்தார்களை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் பணம் அனுப்பி மோசடி செய்திருப்பதை நிறுவனத்தார்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனால் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியிலிருந்து பணமோசடி செய்த கணக்காளர் ரம்யாவை கைது செய்யும் படி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
மேலும் படிக்க...
கொரோனாவில் இருந்து மீண்டாரா ஜோக்கோவிச்?
மேலும் மோசடி செய்யப்பட்ட ரூபாய் 45 லட்சம் பணத்தை பெற்றுத் தருமாறும் நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் குறிப்பிடப்பட்டிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தங்களது நிறுவனத்திலிருந்து கணக்காளர் ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் ஒன்றை அளித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது.