கேரளாவுக்கு நடிகை நயன்தாரா ₹10 லட்சம் நிதி உதவி

கேரளாவுக்கு நடிகை நயன்தாரா ₹10 லட்சம் நிதி உதவி
நயன்தாரா - நடிகை
  • News18
  • Last Updated: August 18, 2018, 5:50 PM IST
  • Share this:
கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை நயன்தாரா ₹10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் கேரள மாநிலம் தனித்தீவு போல காட்சியளிக்கிறது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர் கனமழையால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 14 மாவட்டங்களுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்தால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 1,65,538 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,857 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 3,393 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா ₹10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். முன்னதாக திரைத்துறையை சேர்ந்த நடிகர் தனுஷ், சித்தார்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி,  விஷால் ஆகியோர் உதவி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: August 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading