இரும்புத்திரை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் வேகம் எடுத்த விஷாலுக்கு 2018-ம் ஆண்டிலேயே ஒரு பேரிடி காத்திருந்தது. சண்டக்கோழி இரண்டாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறாமல் போன நிலையில் 2019-ம் ஆண்டை பெரிய அளவில் நம்பி இருந்தார் விஷால்.
வெங்கட் மோகனுடைய இயக்கத்தில் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற டெம்பர் திரைப்படத்தின் ரீமேக்காக உருவான
அயோக்யா படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் போதிய ஆதரவு பெறவில்லை. மேலும் படத்தின் ரிலீஸ் தினத்தில் எழுந்த பொருளாதார நெருக்கடி விஷாலை கடுமையாக பாதித்தது.
இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் திரைப்படமும் வெளியான தடமே தெரியாமல் காணாமல் போனது. ஆக்ஷன் திரைப் படத்தின் சண்டைக் காட்சிகளில் கால் முடிந்து சில மாதங்கள் விஷால் ஓய்வில் இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டது மற்றொரு கொடுமை. இந்த காரணங்களால் நடிகர் விஷாலுக்கு 2019-ம் ஆண்டு மிகமோசமான ஆண்டுகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. எனவே 2019-ம் ஆண்டில் சொதப்பிய நடிகர்கள் பட்டியலில் விஷால் 5-ம் இடம்பிடித்துள்ளார்.

விஷால்
2019-ம் ஆண்டு
விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் மட்டுமே வெளியானது. கமல் தயாரிப்பில் விக்ரம் என்ற செய்திகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பெரும்பாலான காட்சிகளில் தோன்றாமல் போனது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. பிரஞ்சு திரைப்படத்தின் அப்பட்டமான ரீமேக் என்பதால் இந்த படத்தின் காட்சிகள் பலவும் மக்கள் மனதோடு ஒன்றாமல் போனது. தொடர் தோல்விகளால் வெற்றிக்காகப் போராடி வரும் விக்ரமுக்கு 2019-ம் ஆண்டு ஏமாற்றமாக அமைந்தது. எனவே 2019-ம் ஆண்டு சொதப்பிய ஹீரோக்கள் பட்டியலில் விக்ரம் நான்காம் இடம்பிடித்துள்ளார்.

கடாரம் கொண்டான்
தமிழ் சினிமாவில் பிரச்னை என்ற வார்த்தையில் இருந்து பிரிக்க முடியாத நடிகரான
சிம்புவிற்கு 2019 -ம் ஆண்டிலும் சோதனைகள் வரிசைகட்டின. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றன. தெலுங்கில் வெற்றிபெற்ற பவன் கல்யான் படத்தை ரீமேக் என்ற பெயரில் குண்டு உடலுடன் சிம்பு கெடுத்துவிட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

பாடல் காட்சியில் நடிகர் சிம்பு
மேலும் மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளும் சிம்பு ரசிகர்களை வெறுப்படைய செய்தது. சிம்பு திரைப்படங்களில் மீண்டும் நடக்கத் துவங்க வேண்டும் என சிம்புவுக்கு எதிராக சிம்பு ரசிகர்களே வீடியோ வெளியிடும் அளவிற்கு 2019-ம் ஆண்டு சிம்புவிற்கு மோசமாக அமைந்தது. அதனால் இந்த ஆண்டு சொதப்பிய நடிகர்கள் பட்டியலில் சிம்புவுக்கு 3-வது இடம்.

விஜய் சேதுபதி
2019 -ம் ஆண்டில் அடுத்தடுத்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றியனார்
விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் திரைப்படம் வெளியான சுவடே தெரியாமல் மறைந்து போனது. இதன் பின்னர் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வித்தியாசமான திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறைவதற்குள் சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகி தோல்வியைத் தழுவியது.

காப்பான் படத்தில் சூர்யா - சாயிஷா
தமிழ் சினிமா பார்த்து பழகிய வழக்கமான மசாலா திரைப்படமாக அமைந்த சங்கத் தமிழ் திரைப்படம் விஜய் சேதுபதி ரசிகர்களை மேலும் அயர்ச்சி அடைய செய்தது. 2019ல் மூன்று திரைப்படங்கள் வெளியாகி அதில் ஒரு திரைப்படம் மட்டுமே விஜய் சேதுபதிக்கு ஆறுதலாக அமைந்ததால் இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம் கிடைக்கிறது.
20180- ம் ஆண்டில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பின்னர் நீண்ட இடைவெளியில்
சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்கள் 2019-ம் ஆண்டு வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் வெளியாகும் திரைப்படம் என்பதாலும் சூர்யா மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதாலும் என்ஜிகே என்கிற திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர் ஆனால் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் உருவாக்கியிருந்த என்ஜிகே திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.
இதன் பின்னர் வெளியான காப்பான் திரைப்படமும் வர்த்தக ரீதியில் ஆறுதலாக அமைந்தாலும் சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் 2019-ம் ஆண்டு கடந்து சென்றுள்ளது. மீண்டும் சூர்யா வெற்றிப் பாதைக்கு திரும்பி கஜினி, அயன் வாரணம், ஆயிரம் போன்ற படங்களின் நடித்து தனது வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 2020ம் ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதனால் 2020-ம் ஆண்டு சொதப்பிய ஹீரோக்களில் முதலிடம் பெறுகிறார் சூர்யா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.