• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 200 மில்லியன் வியூஸ் பெற்ற ரவுடி பேபி... சாய் பல்லவியை வாழ்த்திய தனுஷ்...!

200 மில்லியன் வியூஸ் பெற்ற ரவுடி பேபி... சாய் பல்லவியை வாழ்த்திய தனுஷ்...!

ரவுடி பேபி பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ரவுடி பேபி பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரவுடி பேபி பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

    மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

    மாரி 2 படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.



    யூடியூபில் வெளியான 18 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற இந்தப் பாடல் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.



    இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் தனுஷ், பிரபுதேவா, பாலாஜி மோகன் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது பதிவில், சாய்பல்லவி நீங்கள் நடித்த ‘வச்சிந்தே’ பாடலின் சாதனையை நீங்களே முறியடித்துவிட்டீர்கள், வாழ்த்துகள். ரவுடி பேபியை ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி" என்று கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.





    டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: