2.0 படத்தில் ஒரு லட்சம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டதா?

5

One Lakh Mobile Phones Used In 2.0 | 2.0 படத்தில் எமி ஜாக்சன் கண்ணின் லென்சில் எல்.ஈ.டி லைட் வைக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #Shankar

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஷங்கர் இயக்கதில் உருவாகியுள்ள 2.0 படம் நாளை திரைக்கு வரயிருக்கும் நிலையில், இந்தப் படத்தில் ஒரு லட்சம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது என்ற முக்கியமான தகவலை கலை இயக்குநர் முத்துராஜ் வெளியிட்டுள்ளார்.

  லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாளை உலகம் முழுவதும் 2.0 வெளியாகவுள்ளது.  2.0 படத்தில் பணியாற்றி கலை இயக்குனர் முத்துராஜ் இந்தப் படம் குறித்து பல்வேறு முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், “2.0 படத்தின் ஒரு காட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது” என்று கூறினார்.  “ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்தப் படத்திற்காக 18 செட்டுகளுக்கும் மேல் போடப்பட்டது. எமி ஜாக்சன் கண்ணின் லென்சில் எல்.ஈ.டி லைட் வைக்கப்பட்டது. செல்போன்கள் வைப்பதற்கு என்று புதிதாக கடை ஒன்றையும் திறந்தோம். வெவ்வேறு இடங்களில் இருந்து டம்மி செல்போன்களை வாங்கி வந்தோம்” என்பது உள்ளிட்ட பல மறக்க முடியாத தகவல்களை கலை இயக்குனர் முத்துராஜ் வெளியிட்டுள்ளார்.

  Also See...

  Published by:Murugesan L
  First published: