ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விரைவில் வருகிறது ரஜினியின் 2.0... தமிழ் ராக்கர்ஸ் சவால்!

விரைவில் வருகிறது ரஜினியின் 2.0... தமிழ் ராக்கர்ஸ் சவால்!

2.0 பட போஸ்டர்

2.0 பட போஸ்டர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சர்கார் படத்தை அடுத்து பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியிருக்கும் ரஜினிகாந்தின் படத்தையும் விரைவில் வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. 

  தீபாவளியன்று திரைக்கு வந்த விஜயின் சர்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று பகிரமங்கமாக சவால் விடுத்திருந்தது தமிழ் ராக்கர்ஸ். இதை தடுக்க தமிழ்த்  திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் சர்கார் படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டனர்.

  இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் - ஷஙக்ர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 2.0 படத்தை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  2.0 படம் சுமார் ரு.600 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலம்  அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதற்காக நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த் 2.0 வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியிருந்தார்.

  இந்த நிலையில் 2.0 படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் அறிவித்திருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த நடவடிக்கையை தமிழ்த் திரையுலகம் தடுத்து நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  வீடியோ பார்க்க: லேட்டா வந்தாலும், கரெக்டா வரணும் | நடிகர் ரஜினிகாந்த் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Rajinikanth, Tamil rockers