சல்மான்கான் மனு மீதான விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

சல்மான்கான் மனு மீதான விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு
நடிகர் சல்மான் கான்
  • News18
  • Last Updated: May 7, 2018, 10:14 AM IST
  • Share this:
மான் வேட்டை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சல்மான்கான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தில் 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த மாதம் 5-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.  சல்மான்கானுக்கு 10 ஆயிரம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சல்மான்கானை தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


இதனைதொடர்ந்து ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் அவர் ஜாமீனில் வெளிவந்தார். மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் சல்மான்கான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின் போது அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
First published: May 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading