Home /News /entertainment /

மோடிக்கு எதிராக நேசமணியா? - காயத்ரி ரகுராம் கோபம்

மோடிக்கு எதிராக நேசமணியா? - காயத்ரி ரகுராம் கோபம்

நேசமணி வடிவேலு | காயத்ரி ரகுராம்

நேசமணி வடிவேலு | காயத்ரி ரகுராம்

மோடிக்கு எதிராக நீங்கள் இதை செய்தால் முட்டாள்தனமான யோசனை. நம்மைக் கீழிறக்கி முட்டாளாக நடந்து கொள்ள வைக்கும். உலக மக்கள் நமக்கு மூளையில்லை என எண்ணுவார்கள்.

  • News18
  • Last Updated :
    மோடிக்கு எதிராக நீங்கள் இதை செய்தால் முட்டாள்தனமான யோசனை என்று Pray_for_Neasamani ஹேஸ்டேக் குறித்து காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

    `Civil Engineering Learners' என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என பிரெண்டஸ் படத்தின் வடிவேலு நகைச்சுவை காட்சியை மையமாக வைத்து பதிலளித்தார். உடனே அவரது நண்வர் இப்போது நேசமணி இப்போது நலமாக உள்ளாரா என்று கேள்வி எழுப்ப, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.



    இது போதுமே 'விடுவோம்மா நாங்க' என்பது போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் கோதாவில் இறங்கி, பிரேக்கிங் நியூஸ், டெம்ப்ளேட் வீடியோ என பலவிதமாக மீம்ஸ்களை வெளியிட தொடங்கினர். இதையடுத்து பேஸ்புக்கில் வைரலான நேசமணி, தற்போது ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டாகி 'ஓவர் நைட்டில் ஒபாமா' ஆகிவிட்டார்.

    நேசமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 இட்லி மற்றும் கலக்கி சாப்பிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ் அளித்தது போல் படுஜோரான மீம்ஸை வலைதளவாசிகள் பறக்க விட்டனர்.



    இதனால் Pray_for_Neasamani என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. ஆங்கில ஊடகங்கள் தொடங்கி பிபிசி விரை நேசமணி யார் என்று செய்தி வெளியிட்டன. உலக அளவில் கவனத்தை ஈர்த்த நேசமணி ட்ரெண்டிங் குறித்து பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அந்த ட்விட்டர் பதிவில், ‘மிகச்சிறந்த நகைச்சுவைக் காட்சி, மீம் ஹேஸ்டேக்காக மாறியுள்ளது. Pray_for_Neasamani என்பது தேவையிலாத ட்ரெண்டிங். நம்முடைய இந்த வெட்டித்தனத்தால் முட்டாளாகத் தான் தெரியப் போகிறோம், மோடிக்கு எதிராக நீங்கள் இதை செய்தால் முட்டாள்தனமான யோசனை. நம்மைக் கீழிறக்கி முட்டாளாக நடந்து கொள்ள வைக்கும். உலக மக்கள் நமக்கு மூளையில்லை என எண்ணுவார்கள்.



    முக்கியமாக அந்தக் காட்சியின் நகைச்சுவையை ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இது இப்படியாகியுள்ளது. போலியான போராளிகளைக் கண்டு கவலைப்படுகிறேன். நீங்கள் முட்டாளாக நடந்து கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் முட்டாள்கள் அல்லர்.



    முட்டாள்தனமான ஹேஸ்டேக்குகள், மீம்களுக்காக காங்கிரஸ் நிறைய பணம் செலவழித்து மீண்டும் தோற்பதற்காக முயல்கிறது. இதே காரணத்துக்காகத்தான் இந்தியா முழுக்க காங்கிரஸ் தோற்றுள்ளது. மீம் கிரியேட்டர்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது. மக்களிடம் இது எடுபடவில்லை. இந்த நகைச்சுவை வடிவேலுக்கானது. அவருக்கு மட்டும் தான்” என்று கூறியுள்ளார்.

    வீடியோ பார்க்க: தொலைபேசியில் பேசிய நேசமணி! என்ன சொன்னார் தெரியுமா?


    வீடியோ பார்க்க: சுத்தியல் தவறிதான் விழுந்ததா? நேசமணி குறித்து கிசுணமூர்த்தியுடன் நேர்காணல்!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Vadivelu, BJP, Modi

    அடுத்த செய்தி