• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அறிவுரை கேட்ட மகளுக்கு அசத்தல் பதில் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

அறிவுரை கேட்ட மகளுக்கு அசத்தல் பதில் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 10 வருடங்களில், நீங்கள் எங்களுடன் செலவழிக்கும் நேரம் குறைந்ததை விட வேறு எதுவும் மாறிவிடவில்லை - கதீஜா ரஹ்மான்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆஸ்கர் வென்று 10 ஆண்டுகள் ஆன பின்னும் தனது தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் குணத்தில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று அவரது மகள் கதிஜா ரஹ்மான் கூறியுள்ளார்.

    ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் குல்சார், பாடகர்கள் சுக்விந்தர் சிங் உள்ளிட்டோருடன் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானும் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், "உங்கள் இசை மற்றும், நீங்கள் பெற்ற விருதை வைத்து உலகத்துக்கு உங்களைத் தெரியும். ஆனால் உங்கள் மீது மீது அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் இருக்கக் காரணம் நீங்கள் எங்களுக்கு கற்பித்த நன்மதிப்புகள் தான். உங்கள் தன்னடக்கம் தான் எங்களை மிகவும் ஈர்க்கிறது. நீங்கள் ஆஸ்கர் பெற்ற பின்னும் உங்கள் குணத்தில் அணு அளவும் மாற்றமில்லை.



    கடந்த 10 வருடங்களில், நீங்கள் எங்களுடன் செலவழிக்கும் நேரம் குறைந்ததைவிட வேறு எதுவும் மாறிவிடவில்லை. இப்போது அதற்கு பதிலாக சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் நிறைய சமூக சேவை செய்கிறீர்கள். இது உங்களிடம் நான் அதிகம் போற்றும் ஒரு குணம்" என்றார்.

    மேலும் பேசிய அவர், தங்களுக்கு ஏதாவது அறிவுரை கூறுமாறு ரஹ்மானிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், "நான் பொதுவாக யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை. நீங்கள் மூவரும் வளரும்போது, எனது அம்மா நான் வளரும் போது எனக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் உங்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதில் உறுதி செய்துகொண்டேன். இப்போது நீங்கள் உங்கள் மனம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை செய்யும் நேரம். இறைவன் உங்களை வழிநடத்துவார். அவரை வேண்டுங்கள். உங்கள் மனசாட்சிதான் வாழ்க்கையில் உங்களை வழிநடத்த சிறந்த கருவி என நினைக்கிறேன்" என்று கூறினார்.

    தமிழக அரசை கடவுள் போல் நம்புகிறோம்... விஷால் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: