கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்தவர் பூக்கடை உரிமையாளர் சுனிலின் மகள் கவுரி. 10ம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். வனவிலங்குகள், மக்களின் வாழ்வியலை ஓவியமாக வரையத் தொடங்கி, பின்னர் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பிரபலங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக வரைந்து அசத்தி வருகிறார். இதனால் சுனிலின் பூக்கடையில் மலர்களை விட அவரது மகள் வரைந்த ஓவியங்களே அலங்கரித்துள்ளன.
பல்வேறு பிரபலங்களை ஓவியங்களாக தீட்டினாலும், கவுரி தனக்கு பிடித்தமான நடிகர் விஜயின் பல்வேறு பாவனைகளை வரைவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். ஓவிய கலையை தானாக கற்றுக் கொண்டுள்ள சிறுமி, விஜயை உயிரோட்டமுள்ள ஓவியமாக வரைவதற்கு விஜய் மீதான பிரியமே காரணமாக அமைந்துள்ளது.
விஜயின் ஒரு திரைப்படம் கூட தவறவிடாமல் பார்க்கும் இந்த ரசிகை, அவரது அசத்தல் நடன காட்சிகளும் சண்டை காட்சிகளுமே அவரை ஓவியமாக வரைய ஊக்கமளிப்பதாக முகம் மலர்கிறார்.
அனைத்து கேரள விஜய் ரசிகர்கள் அசோஷியேசன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் கவுரி வரைந்த விஜயின் படம் முதல் பரிசை தட்டிச் சென்றது. யுகேஜி வகுப்பு முதலே ஓவிய கலையில் ஆர்வம் கொண்டுள்ள சிறுமி, தனக்கு முதல் பரிசு பெற்றுத் தந்த விஜயின் ஓவியத்தை அவரிடமே நேரில் பரிசாக வழங்க வேண்டும் என்று ஆசையுடன் காத்திருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
யுகேஜி வகுப்பு முதலே ஓவியம் வரைய தொடங்கினேன். மூன்றாவது, நான்காவது படிக்கும் போது மனிதர்களின் முகத்தை வரைய தொடங்கினேன். எனது ஓவியங்களை நிறைய இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளேன். எனக்கு பென்சில் ஓவியங்கள் வரைய பிடிக்கும், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கடவுள்களை வரைந்துள்ளேன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.